சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா?
பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும் .
பன்னீர் புரதத்தின் ஆதாரமான ஒன்றாகும். மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதனை எடுத்து கொள்வதனால் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை கிடைக்கின்றது.
அதுமட்டுமின்றி சமீபத்திய ஆய்வொன்றில் பன்னீர் நீரழிவு நோயை குறைப்பதாக கூறப்படுகின்றது. உண்மையில் பன்னீர் எவ்வாறு நோய் நீரழிவு நோயை குறைக்க உதவுகின்றது என்பதை பார்ப்போம்.
பன்னீர் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி பன்னீர் சாப்பிடலாம். காலை மற்றும் இரவு டின்னருக்கு பன்னீரை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 80 முதல் 100 கிராம் வரையிலான பன்னீரை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும் ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கட்டுக்குள் வைக்கவும் இது உதவுகிறது.
எனவே, பன்னீரை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு
உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பிறகு திட்டமிட்டு உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.