புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் ஜேர்மனி: ஆனால் அவர்கள் இல்லாமல் ஜேர்மனியால் சமாளிக்க முடியுமா?
ஜேர்மன் சேன்ஸலர், சிரிய அகதிகளை சிரியாவுக்கே திருப்பி அனுப்புவது குறித்து பேசிவருகிறார்.
ஆனால், ஜேர்மனியில் பணியாற்றும் மருத்துவர்களில் 7,000க்கும் அதிகமானவர்கள் சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்!
ஆக, பிரித்தானியாவைப்போலவே ஜேர்மனியில் பணியாற்றும் மருத்துவர்களும் வருத்தத்தில் தங்கள் நாட்டுக்கே திரும்பிவிட்டார்களானால், ஜேர்மனியால் அவர்கள் இல்லாமல் சமாளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் ஜேர்மனி
உலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துவருகின்றன. எங்கள் நாடு எங்களுக்கே, அல்லது, எங்கள் நாட்டு குடிமக்களுக்கே முன்னுரிமை என்னும் ஒரு எண்ணம் சில நாடுகளில் மேலோங்கத் துவங்கியுள்ளது.

பிரித்தானியா போன்ற சில நாடுகள் புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்துவதால் அவர்கள் வேறு நாடுகளுக்கு புறப்படத் தயாராகிறார்கள்.
அது தெரிந்ததும், நன்கு கற்றவர்கள், அதிகம் ஊதியம் பெறும் வேலையிலிருப்போர் மட்டும் தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என சில நாடுகள் கூறத் துவங்கியுள்ளன. காரணம், சில நாடுகளைப் பொருத்தவரை, புலம்பெயர் பணியாளர்கள் இல்லாமல் அவர்களால் சமாளிக்க முடியாது.
ஒரு காலத்தில் வலதுசாரிக் கட்சிகள் என முத்திரை குத்தப்பட்ட கட்சிகள் மட்டும் புலம்பெயர்தலுக்கு எதிரானவை என கருதப்பட்டன.
ஜேர்மனியைப் பொருத்தவரை அந்த வலதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக மக்களே போராட்டம் நடத்தியதுண்டு.
ஆனால், இன்று ஆளும் கட்சியே புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளது.
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், சிரியாவில் உள்நாட்டு யுத்தம் முடிந்துவிட்டது. ஆகவே, சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை சிரியாவுக்கு திருப்பி அனுப்பிவிடலாம் என்னும் ரீதியில் பேசிவருகிறார்.
ஆனால், ஜேர்மனியில் பணியாற்றும் மருத்துவர்களில் 7,000க்கும் அதிகமானவர்கள் சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்!
ஆக, பிரித்தானியாவைப்போலவே ஜேர்மனி தங்களை மோசமாக நடத்துவதால் சிரியா நாட்டவர்களான மருத்துவர்களும் தங்கள் நாட்டுக்கே திரும்பிவிட்டார்களானால், ஜேர்மனியால் அவர்கள் இல்லாமல் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
சம்பந்தப்பட்ட மருத்துவர்களும், எங்கள் நாடு பாழடைந்துகிடக்கும் நிலையிலும் நாங்கள் இங்குள்ளவர்களுக்கு சேவை செய்கிறோம். ஆனால், சேன்ஸலரின் பேச்சு வருத்தமளிப்பதாக உள்ளது என்கிறார்கள்.
ஆக, புலம்பெயர்தலுக்கு எதிராகவே செயல்பட்டுவரும் இந்த அரசியல்வாதிகளுக்கு, அந்த புலம்பெயர்ந்தோர் நாட்டை விட்டு போய்விட்டால் தாங்கள் எப்படி சமாளிப்போம் என்பது தெரியாதா? அல்லது, வெறுமனே புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்கிறார்களா என்பது புரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |