ஜீமெயில் முகவரி ஒன்றை Block செய்ய முடியுமா?
கைப்பேசிகளில் எமக்கு தேவையான ஒருவரின் இலக்கத்திலிருந்து அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வருவதனை தடுக்க அந்த இலக்கத்தை நாம் புளொக் செய்ய முடியும். அதே விதமாக ஜீமெயிலிலும் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை புளொக் செய்ய முடியும்.
சில நபர்களிடமிருந்து தேவையற்ற வகையில் மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்றால் அவரை முடக்க முடக்க முடியும்.
உங்களது desktop website ஊடாகவோ iPhone, iPad, அல்லது Android. ஊடாகவோ இவ்வாறு மின்னஞ்சல் முகவரியை முடக்க முடியும்.
தேவையற்ற மின்னஞ்சல்களை தேடித் தேடி அழிப்பதனை விடவும் இவ்வாறு முடக்கிவிட்டால் உங்களது நேரம் சேமிக்கப்படும்.தேவையற்ற மின்னஞ்சல்களை தேடித் தேடி அழிப்பதனை விடவும் இவ்வாறு முடக்கிவிட்டால் உங்களது நேரம் சேமிக்கப்படும்.
ஒருவரின் முகவரியை எவ்வாறு புளொக் செய்வது?
- உங்களது மின்னஞ்சல் கணக்கை திறந்து கொள்ளவும்.
- யாருடைய முகவரியை நீங்கள் முடக்க நினைக்கின்றீர்களோ அவர் அனுப்பிய முகவரியை தெரிவு செய்தால் அனுப்புவரின் பெயருக்கு அருகாமையில் மூன்று புள்ளிகள் காணப்படும்.
- அந்த மூன்று புள்ளிகளை தெரிவு செய்தால் அதில் ரிப்லை, பார்வர்ட் உள்ளிட்ட தெரிவுகள் வரும். அந்த தெரிவுகளில் புளொக் என்னும் தெரிவினை அழுத்த வேண்டும்.
- கைப்பேசிகளில் புளொக் செய்யும் போது உறுதிப்படுத்தும் செய்தி ஒன்று கிடைக்கப் பெறாது என்ற போதிலும் மின்னஞ்சல் வருவது நின்றுவிடும்.
- டெஸ்க்ட்டாப் கணனிகளில் உறுதிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.
- இவ்வாறு தேவையற்ற மின்னஞ்சல் முகவரியை முடக்கக்கூடிய சாத்தியம் கிடைக்கும்.