தினமும் வெங்காயத்தை சாப்பிடலாமா? என்ன நன்மைகள் கிடைக்கும்?
Fat
Cholesterol
Diabetes
Anemia
Jaundice
By Kishanthini
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.
இதனை தினமும் அன்றாட உணவில் எடுத்து கொள்வதனால் பல நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
[SA2PZ ]
- அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து வருவதால் ரத்த சோகை தீர்ந்து ஹமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
- வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவையும் குறைக்கும்.
- தினசரி உணவோடு பச்சையாக 4 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வாருங்கள். அது அடிவயிற்றில் தேங்கியிருக்கிற கொழுப்பைக் கரைத்துத் தொப்பையைக் குறைக்கும்.
- வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான சல்பர் உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
- வெங்காயம் கணையத்தில் இருக்கும் கழிவுகளை சுத்தப்படுத்தும். அதனால் இன்சுலின் சுரப்பும் சரியான அளவில் இருக்கும். இன்சுலின் சுரப்பு முறையாக இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
- கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சின்ன வெங்காயத்தை அரைத்து சிறு உருண்டையாக்கி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வரலாம். தேவைப்பட்டால் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெங்காயச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வர, பித்த நீர் அதிகமாக சுரக்காமல் இருக்கும். கல்லீரலில் பித்த நீர் அதிகமாக சுரப்பதும் மஞ்சள் காமாலை ஏற்படக் காரணமாக அமையும். இதை தடுக்க வெங்காயச் சாறு முக்கியம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US