ஒரே வாரத்தில் தொப்பையை சட்டென குறைக்கனுமா?
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் அதிக அளவில் இனிப்புகள், உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும் குளிர்பானங்களை குடிப்பதாலும் தேவையற்ற கொழுப்பு சேகரிப்புக்கு ஆளாகின்றனர்.
இதனை தானாகவே தொப்பை பிரச்சினை உருவெடுத்து விடுகின்றது. இது, அதிகப்படியான வீக்கம், சோர்வு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இது உங்கள் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகப்படியான உணவு உட்கொள்வது உங்கள் உடல் எடையை குறைக்கும் திறனை பாதிக்கும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து தேவையற்ற கொழுப்பிலிருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும்.
அந்தவகையில் தொப்பையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க கூடிய சூப்பரான பானம் ஒன்றினை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கிரீன் டீ - 1 தேக்கரண்டி
- புதினா இலைகள் - 6-7
- எலுமிச்சை - 1/2
- தண்ணீர் - 2-3 கப்
- தேன் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். அதனை அடுப்பில் இருந்து எடுத்து, பச்சை தேயிலை கொண்ட கப்பில் ஊற்றுவதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
சூடான நீரை ஊற்றுவதற்கு முன்பு சுவைக்காக புதினா இலைகளை சேர்க்கலாம். இதை 2 நிமிடம் மூடி வைத்து பின்னர் வடிகட்டவும்.
பிறகு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கிளறி நன்கு கலக்கவும். உங்கள் கிரீன் டீ டிடாக்ஸ் பானம் இப்போது தயாராக உள்ளது. நீங்கள் விரும்பினால் இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் தினசரி வழக்கத்தில் 2-3 கப் கிரீன் டீ சேர்ப்பது நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்கும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைந்து ஆரோக்கியமான உணவு எடை குறைக்கவும், தீங்கு விளைவிக்கும் தொப்பை கொழுப்பைத் தடுக்கவும் உதவும்.