புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்கலாமா? கனடா மக்கள் கருத்து
புலம்பெயர்ந்தோரை வரவேற்பது தொடர்பில் பெரும்பாலான கனேடிய மக்களின் கருத்து என்ன என்பதை அறிய, சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
புலம்பெயர்தல் குறித்து கனேடிய மக்களுடைய கருத்து
பொதுவாகக் கூறினால், அரசியல்வாதிகள் கூறுவதுபோல கனேடிய மக்கள் மொத்தமாகவே புலம்பெயர்தலை எதிர்ப்பவர்கள் அல்ல என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கனடாவில், Maru Public Opinion என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மக்களுக்கு புலம்பெயர்தல் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றது என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள், குறைவான அளவில் அனுமதிக்கவேண்டும் என்பவர்களும், அனுமதிக்கவே கூடாது என்ற மன நிலை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
ரொரன்றோ, கால்கரி, எட்மன்டன் மற்றும் வான்கூவரில் வாழும் மக்களில் 22 சதவிகிதம் பேர், இப்போதைக்கு புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், வான்கூவரில் வாழும் மக்களில் 54 சதவிகிதம் பேர் புதிய புலம்பெயர்ந்தோர் தங்க நகரின் மீது நேர்மறையான, அல்லது நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை என்று கூறியுள்ளனர்.
ரொரன்றோவிலும் கால்கரியிலும் வாழ்பவர்களில் 49 சதவிகிதத்தினரும், எட்மன்டனில் வாழ்பவர்களில் 48 சதவிகிதம்பேரும் இதே கருத்தை ஆமோதிக்கின்றனர்.
மேலும், இந்த நான்கு நகரங்களில் வாழ்பவர்களிலும், 45 சதவிகிதம் பேர் கனடா புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்த அளவிலேயே புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |