வெட்டுக்கிளிகள் பற்றிய சில ஆச்சர்யமான தகவல்கள் பகிர முடியுமா?
வெட்டுக்கிளி நீண்ட தூரம் பறக்கும் மற்றும் அதிக உயரத்தில் குதிக்கும் திறன் கொண்ட ஒரு பூச்சி.
உலகில் எண்ணற்ற எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகள் உள்ளன. சுமார், 11,000 வகையான வெட்டுக்கிளிகள் உள்ளன.
வெட்டுக்கிளிகள் பொதுவாக பாலைவனங்கள், காடுகள், புதர்கள், விவசாய நிலங்கள், வெப்பமண்டல காடுகள் அல்லது சவன்னா புல்வெளிகள் போன்ற திறந்த நிலங்களில் காணப்படுகின்றன. பல்வேறு இடங்களுக்கு ஏற்ப, பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன.
வெட்டுக்கிளிகள் பொதுவாக தாவர உணவுகள் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் மித வெப்பமான சூழல் இருக்கும் பகுதிகளில் வாழ்கின்றன.
பொதுவாக, வெட்டுக்கிளிகள் தனித்துப் வாழ்கின்றன. அவை ஜோடியாகக் காணப்பட்டால், அது
இனச்சேர்க்கைக்கு மட்டுமே. அவை உணவுக்காக நாடு முழுவதும் இடம்பெயர்கின்றன.
ஒரு வெட்டுக்கிளி வேட்டையாடப்படாவிட்டால் ஒரு வருடம் வரை வாழ்கிறது. 50% வெட்டுக்கிளிகள் முன்கூட்டியே இறக்கின்றன அதாவது வேட்டையாடப் படுகின்றன.
வெட்டுக்கிளிகள் 1 முதல் 7 செமீ அளவு மட்டுமே இருக்கும். அவை வீட்டு ஈயை விட எட்டு மடங்கு பெரியதாகவும், எறும்பை விட 15 மடங்கு பெரியதாகவும் இருக்கும்.
வெட்டுக்கிளிகள் மிகவும் குறைந்த எடை கொண்டவை, 1 கிராமுக்கும் குறைவான எடை கொண்டவை.
ஒரு வெட்டுக்கிளி தரையில் இருந்து மிக உயரமாக குதிக்க முடியும். அளவு சிறியதாக இருந்தாலும், வெட்டுக்கிளிகள் தரையில் இருந்து 1 முதல் 1.5 மீ உயரம் வரை குதிக்கும் திறன் கொண்டவை.