பீனட் பட்டர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?
உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய விஷயங்களை வேர்க்கடலை வெண்ணெயும் ஒன்றாக கருதப்படுகின்றது.
பீனட் பட்டர் என்று அழைக்கப்படும் தினந்தோறும் சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகள் பயக்கும் என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அந்தவகையில் இது எப்பட உதவும்? எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
எடை இழப்பிற்கு உதவுமா?
வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனை இருக்காது. மேலும் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவியாக உள்ளது. எனவே தேவையில்லாமல் எவ்வித நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடுவதற்கு நாம் விரும்ப மாட்டோம்.
இதோடு குறைவான கலோரிகள் உள்ளதால் தேவையற்ற கொழுப்புகளை உங்களது உடலில் சேர்க்க வாய்ப்பில்லை.
மேலும் இதய நோய், இரத்த அளவைக்கட்டுக்குள் வைப்பது போன்ற பல உடல் நலப்பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.
எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
- தோசைக்கல்லில் வேர்க்கடலை வெண்ணெய்யை தடவ வேண்டும். அதன் மேல் நறுக்கிய வேர்க்கடலை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சம் சூடாக்கிச் சாப்பிடலாம்.
- ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் எடுத்துக் கொண்டு பின்னர் சிறிதளவு பீனட் பட்டர் கலந்து சாப்பிடலாம்.
- தயிர் மற்றும் பீனட் பட்டர் சேர்த்து பழங்களுக்கு டிப்பிங் சாஸ் தயாரிக்கலாம்.
- பீனட் பட்டர், எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றைக் கொண்டு சாலட் தயார் செய்யலாம்.
- செலரி தண்டுகள் அல்லது ஆப்பிள் துண்டுகள் மீது பீனட் பட்டரை தடவிச் சாப்பிட்டால் உங்களுக்குக் கூடுதல் சுவை தரக்கூடும்.
- பீனட் பட்டரைப் பயன்படுத்திக் குறைவான கொழுப்புள்ள ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.