சாம்சுங் தொலைக்காட்சிகளை தொலை தூரத்திலிருந்து இப்படிச் செய்யலாமா?
உலகின் முன்னணி தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சாம்சுங் நிறுவனம் தனத தொலைக்காட்சிகளை வெகு தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
சாம்சுங் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் தொலைக்காட்சியை இவ்வாறு செயலிழக்கச் செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
அண்மையில் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கொள்ளையர்கள் சாம்சுங் நிறுவன காட்சியறைகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சிகளை களவாடிச் சென்றிருந்தனர்.
இவ்வாறு களவாடப்பட்ட தொலைக்காட்சிகளை செயற்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.
Television Block Function என்ற ஓர் தொழிற்பாட்டின் மூலம் இவ்வாறு களவாடப்பட்ட தொலைக்காட்சிகளை செயலிழக்கச் செய்ய முடியும்.
எவ்வாறெனினும், தொலைக்காட்சிகளை செயலிழக்கச் செய்ய வேண்டுமாயின் அவை இணையத்துடன் தொடர்புபடுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
களவாடப்பட்ட ஸ்மார்ட் தொலைக்காட்சியொன்று இணையத்துடன் தொடர்புபட்டால் உடன்டியாக அதன் சீரியல் இலக்கத்தை கண்காணித்து அந்த தொலைக்காட்சி செயற்படுவதனை முடக்கிவிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சாம்சுங் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் அனைத்திலும் இந்த அம்சம் காணப்படுவதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.