காலை உணவை தவிர்த்தல் புற்றுநோயை உண்டாக்கும்: ஆய்வில் வெளியான தகவல்
தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் காலை நேர உணர்வை தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆய்வில் வெளியான தகவல்
காலை நேர உணவை நாம் தவிர்ப்பதன் மூலம் நம்முடைய உடலில் குளுக்கோஸின் மெட்டபாலிசம் அளவு சீக்கரமே பாதிக்கும்.
istockphoto.com/peopleimage
இதனால் நாள்பட்ட Inflammations , உடல் பருமன், கார்டியோ வாஸ்குலர் நோய்கள், கேன்சர் உள்ளிட்டவை. ஏற்படக்கூடும் என்று சீனாவின் மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் காலை நேர உணவைத் தவிர்த்ததால் மட்டுமே 63 ஆயிரம் இளைஞர்களுக்கு குடல் புற்றுநோய் அபாயம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்கள்.
காலை நேர உணவை தவிர்ப்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படுவதோடு குளுக்கோஸ் மெட்டபாலிசம் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் நாள்பட்ட தொற்றுகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கு.
அதோடு மரபணு திரிபுகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் ஆகியவையும் அதிகரித்து பல்வேறு வகையான புற்றுநோய்களை உருவாக்குவதற்கான காரணியாகவும் இருக்கிறது.
Parenting.lk
தொடர்ந்து உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவு
உடலின் வளர்ச்சியை மாற்றும் மெதுவாகும்.மன அழுத்த ஹார்மோனால கார்டிசோல் உற்பத்தி அதிகரிக்கும்.
ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு சீராக இருக்காது. குறிப்பாக அடிக்கடி தலைவலி வரும்.டைப் 2 நீரிழிவு பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
காலை நேர உணவை தவிர்ப்பதால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படும். இதய நோய் ஆபத்து அதிகரிக்கும்.மேலும் தலைமுடி உதிர்வு பிரச்சினை உண்டாகும். மூளையின் செயல்பாடு குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |