உங்களுக்கு பொடுகு தொல்லை தீரவே இல்லையா? இந்த எண்ணெயை மறக்கமால் யூஸ் பண்ணுங்க போதும்
பொதுவாக பலருக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் பொடுகு.
தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது.
பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன.
மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. இருப்பினும் இதனை வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டு நீக்க முடியும்.
அவ்வாறான ஒரு இயற்கை வழியை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருள்கள்
- தேங்காய் எண்ணெய் - 150 மில்லி
- நல்லெண்ணெய் - 50 மில்லி
- ஆலிவ் ஆயில் - 50 மில்லி
- இஞ்சி - அரை கிலோ
செய்முறை
இஞ்சியை இரண்டு, மூன்று முறை நன்கு சுத்தமாகக் கழுவி, தண்ணீர் வற்றி உலரும் வரை காத்திருங்கள் அல்லது ஒரு சுத்தமான துணியை வைத்து நன்கு துடைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த இஞ்சியை வட்ட வடிவமாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இந்த இஞ்சியை நன்கு வெயிலில் உலர்த்தி நன்றாகக் காய வைக்க வேண்டும். உடைத்தால் பொடியாக நொறுங்கும் அளவுக்கு காய வைக்க வேண்டும்.
இந்த காய வைத்த இஞ்சியை எடுத்து பிளண்டரில் போட்டு அதோடு எடுத்து வைத்திருக்கும் எல்லா எண்ணெய்களையும் அதே பிளண்டரில் ஊற்ற வேண்டும். பின் இத நன்றாக அரைக்க வேண்டும். பேஸ்ட் பதத்துக்கு வந்துவிடும்.
காய்ந்த இஞ்சி முழுமையாக நைசாக அரைக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெய் மற்றும் இஞ்சி அரைத்த கலவையை ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு இறுக்கமாக காற்று புகாமல் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
15 -20 நாட்கள் வரை நேரடியாக சூரிய ஒளி படாமல் வைத்திருக்க வேண்டும். 20 நாட்களுக்குப் பிறகு அந்த எண்ணெயை இரண்டு முறையாவது தூசிகள் எதுவும் அதில் இறங்காமல் நன்றாக வடிகட்டிக் கொண்டால் இஞ்சி ஆயில் ரெடி.. இதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.