தலைமுடியை தினமும் கழுவலாமா? பக்கவிளைவுகள் எதுவும் உண்டா?
Beauty
Water
HealthTips
Hair tips
By Kishanthini
பொதுவாக பெண்களை பொருத்தவரை தினமும் கூந்தலை கழுவுவது சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை காணப்படும்.
உண்மையில் தினமும் தலைமுடியை கழுவினால் பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒரு ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.
சருமத்தைப்போலவே தலை முடியும் மென்மையான உணர் திறன் கொண்டது. அதனை அளவுக்கு அதிகமாக கழுவினால் அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் தினமும் தலைமுடியை கழுவுவதனால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்
தினமும் கழுவுவது நல்லதா?
- உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை கழுவ தேவையில்லை. அவ்வாறு செய்வது தலைமுடி வறண்டு, வெளிர்தன்மை அடைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் தலைமுடியில் சிக்கலும் ஏற்படக்கூடும்.
- தலைமுடியை அடிக்கடி கழுவுவது முடியின் இயற்கையான அமைப்பையும், பளபளப்பையும் பாதிக்கும். முடியும் பொலிவிழந்து மந்தமாகிவிடும்.
- தலைமுடியை கழுவுவது உச்சந்தலை ஆரோக்கியத்தை பேண உதவும். தலை முடி உதிர்வு, அரிப்பு பிரச்சினையை தடுக்கும்.
- ஆனால் இதை அடிக்கடி செய்துவந்தால் உச்சந்தலையில் ஈரப் பதம் இல்லாத நிலை ஏற்படும்.
- தலைமுடியை அளவுக்கு அதிகமாக ஷாம்பு கொண்டு கழுவக்கூடாது. அடிக்கடி கழுவுவதால் பொடுகு பலவீனமடைந்தாலும், தலைமுடி மெல்லியதாக மாறக்கூடும். முடி உடைந்து போகும் வாய்ப்பும் அதிகம்.
- ஈரமான தலைமுடியில் சீப்பு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் கூந்தல் முடி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
- எந்த அளவுக்கு அதிகமாக தலைமுடியை கழுவுகிறீர்களோ, அந்தளவுக்கு முடி உடைந்து சேதமடையும். எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அடிக்கடி கழுவுவதை தவிருங்கள்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US