பெண்கள் BRA அணிந்து தூங்கலாமா? கூடாதா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
பெண்கள் பலருக்கும் இரவு நேரங்களில் உள்ளாடை(BRA) அணிந்து தூங்கலாமா? கூடாதா? என்கின்ற சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, பெண்கள் BRA அணிந்தபடி தூங்கக் கூடாது என்பதற்கான எந்த ஒரு தீவிரமான மருத்துவ காரணங்களும் இதுவரை சொல்லப்படவில்லை.
இருந்தாலும் சௌகரியம் மார்பக ஆரோக்கியம் மற்றும் ரத்தம் ஓட்டம் போன்ற சில விஷயங்கள் கருத்தில் கொண்டு சொல்லப்படுகிறது. அந்த வகையில், இரவு நேரங்களில் ஏன் BRA அணிந்து தூங்கக் கூடாது என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

1. பெரும்பாலான BRA குறிப்பாக அண்டர் வயர் அல்லது டைட் பேண்ட் கொண்ட பிரா நீண்ட நேரத்திற்கு அணியும் பொழுது நாம் அசௌகரியத்தை சந்திக்கலாம், தூங்கும் பொழுது நாம் வசதியாக உறங்க முடியாது.
2. நாம் இரவு நேரங்களில் BRA அணியும் பொழுது நம்முடைய மார்பகங்களில் நிணநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில நபர்கள் இரவு நேரம் தூங்கும் பொழுது தொடர்ந்து BRA அணிந்து கொண்டுதான் தூங்குகிறார்கள். இதனால் மார்பகங்களில் உள்ள நிணநீர் கால்வாய் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் மார்பகங்களில் உள்ள நிணநீர் அமைப்பு திசுக்களில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. பொதுவாகவே, தடையில்லாத நிணநீர் ஓட்டம் மார்பக ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அணியாமல் தூங்கும் பொழுது மார்பகங்கள் தடையில்லாமல் நகர்வதற்கு உதவியாக இருக்கிறது. அதோடு சேர்ந்து தடையில்லாத நிணநீர் ஓட்டம் சரியான முறையில் இயங்குவதற்கும் அவை உதவியாக அமைகிறது.
3. முக்கியமாக இரவு நேரங்களில் இறுக்கமாக BRA அணிந்து கொள்ளும் பொழுது அதனால் மார்பக திசுக்களான ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. அதுவே இல்லாமல் தூங்கும் பொழுது உங்களுடைய மார்பகங்களுக்கு தடை இல்லாத ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் மார்பகங்களில் ஆரோக்கியம் இன்னும் மேம்படுகிறது.
இறுதியாக இரவு நேரங்களில் BRA அணிய வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒவ்வொருவருடைய சௌகரியத்தை பொருத்தது.
இருப்பினும் பெண்கள் மார்பகம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையை சந்தித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு BRA அணிகின்ற பொழுது மூச்சு திணறல் ஏற்படலாம். அதையும் நாம் கட்டாயமாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனையை பெறுவது முக்கியம்.