10 நாட்களில் 5 கிலோ எடை குறையனுமா? இவற்றை செய்தாலே போதும்
இன்றைய காலத்தில் மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை செய்கிறார்கள்.
ஜிம்முக்கு சென்று உடல் வியர்வை சிந்தி எடையை குறைக்க முயல்கிறார்கள். இவற்றால். விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் நம்புகிறார்கள். எ
னினும், உடல் எடையை குறைக்க மிக எளிய வழியும் உள்ளது. உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். அது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
image - istockphoto
அதிகாலை
காலையில் சுமார் 5 மணிக்கு எழுந்து கிரீன் டீயுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். தினமும் சுமார் 3-5 கிமீ நடக்கவும்.
இது உங்கள் உடலை வியர்க்க வைக்கும். பின்னர் வீட்டிற்கு வந்து காலை சிற்றுண்டியில் ஓட் மீல், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். இவை குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இதனால் உங்கள் வயிறு நிரம்பும், உங்கள் தொப்பையும் குறையும்.
மதிய உணவு
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த கூற்று பொருந்தாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதியம் 2 சப்பாத்தி, சிறிது சாதம், புரதம் நிறைந்த பருப்பு மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
மதிய உணவை உட்கொண்ட பிறகு, கண்டிப்பாக மோர் அல்லது லஸ்ஸி அருந்தவும். இந்த வழிகளில் உடலுக்கு அதிக புரதம் கிடைக்கும்.
இரவு உணவு
இரவு உணவில் எப்போதும் லேசான உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் சரியான நேரத்தில் தூக்கம் வரும். உங்கள் இரவு உணவில் காய்கறிகளின் சாலட், பழங்களை உட்கொள்ளலாம்.
இரவில் உட்கொள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஏற்றது. அதில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும் அதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இது ஜீரணிக்க எளிதானது மற்றும் கொழுப்பைக் குறைக்கும்.