எடை சரசரனு வேகமாக குறைக்கனுமா? அப்போ இந்த ப்ரோக்கோலி காபியை மறக்காமல் குடிங்க போதும்!
அதிகமான சத்து நிறைந்துள்ள காய்கறிகளில் ப்ரோக்கோலியும் ஒன்றாகும்.
ப்ரக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.
இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.
அந்தவகையில் இது உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவி புரிகின்றது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ப்ரோக்கோலி எவ்வாறு உதவுகின்றது?
ப்ரோக்கோலி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது சாப்பிட்டு நீண்ட நேரம் வரையிலும் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தருகிறது.
மேலும் ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாக ப்ரக்கோலி இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும். குறிப்பாக இதை காபி வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் ப்ரக்கோலி காபியை எப்படி தயார் செய்வது, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- ப்ரோக்கோலி பொடி - 2 ஸ்பூன்
- பால் - 1 கப் காபி
- பொடி - அரை ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு கப் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் காபி பொடி மற்றும் ப்ரோக்கோலி பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ப்ரோக்கோலி யை சிறு சிறு துண்டுகளாகவோ அல்லது துருவியோ நன்றாக வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை பிளண்டரில் சேர்த்து பொடி செய்து கொண்டால் ப்ரக்கோலி பொடி தயார்.
2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடரை எடுத்துக் கொள்வது அரை கப் ப்ரோக்கோலி யை பச்சையாகச் சாப்பிடுவதற்குச் சமம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.