தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்? மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீங்க
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அதில் ஒன்று தான் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துவது, ஆப்பிள் பழங்களை நன்றாக மசித்து, அதை ஒரு குறிப்பிட்ட வகை பக்டீரியங்களின் உதவியினால், நொதிக்க செய்து ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கப்படுகிறது.
இதனை குடித்து வந்தால், நம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஒழுங்குபடுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதனால் எடை குறைவது மட்டுமின்றி வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரையும், குறிப்பாக பசியை மட்டுப்படுத்துகிறது.
இருந்தாலும் இதை எப்போது குடிக்க வேண்டும்? எப்படி குடிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.
எப்போது குடிக்க வேண்டும்?
வெதுவெதுப்பான நீரில், ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு சேர்த்து அதை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையை வெகுவிரைவில் குறைக்க உதவுவதுடன், உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.
எதையெல்லாம் செய்யக்கூடாது?
* ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும், ஒரு நாளைக்கு 1 அல்லது 2 டீஸ்பூன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சாலட்டுகளில் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தி வந்தால் எடையை குறைக்கலாம்.
* தொடர்ந்து ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தி வந்தால் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும், எனவே அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மற்ற பயன்கள்
- இரத்தத்தில் உயர் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- செரிமான பிரச்சினைகளை நீக்குகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- சிறந்த சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு உதவுகிறது.