60 நிமிடங்களில் 1575 முறை தண்டால்! 12 பேரக்குழந்தைகளின்.,59 வயது கனடா பாட்டி சாதனை
கனடாவைச் சேர்ந்த 59 வயது பெண்ணொருவர் தண்டால் எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Push-ups
Donna Jean Wilde என்ற 59 வயது கனேடிய பெண் தண்டால் (Pushups) எடுப்பதில் உலக சாதனை படைத்தவர் ஆவார்.
தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்து, கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார் Donna Jean.
இவர் கடந்த வாரம் 1,575 முறை தண்டால் எடுத்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் வெறும் 60 நிமிடங்களில் இதனை செய்து மிரட்டியுள்ளார்.
90 டிகிரி
அத்துடன் அவர் எடுத்த ஒவ்வொரு தண்டாலுக்கும் Pushupயின் அடிப்பகுதியில், 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும்போது முழு கை நீட்டிப்பு தேவை என்ற நிபந்தனைகளுடன் Donna Jean இந்த சாதனையை படைத்துள்ளார்.
Donna Jean முன்னர் செய்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாகவே முறியடித்துள்ளார்.
சாதனை குறித்து பேசிய Donna Jean, "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான Pushups முடிக்க இலக்கு வைத்துள்ளேன்" என்றார்.
தனது பாட்டி மிகவும் அற்புதமானவர் என டோனாஜீனின் பேரக்குழந்தைகள் கூறுகிறார்கள். இவருக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |