கனடாவில் ஏற்பட்ட 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ., அர்ஜென்டினாவில் சாதனை வெப்பம்
கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.
இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்துள்ளது. குறிப்பாக நார்த் வெஸ்ட் டெரிட்டரீஸ் மற்றும் ஒன்டாரியோ பகுதிகளில் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
இந்த தீயின் புகை, காற்றின் வழியாக அமெரிக்காவிலும், வடக்கு ஐரோப்பாவிலும் பரவியதால், பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்தது.
வட அமெரிக்காவில் தீ பரவல் அதிகரிக்கும் காலம் தொடங்கியுள்ளதால், மேலும் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், அர்ஜென்டினாவின் சால்டா நகரம் வரலாற்றிலேயே அதிகமான இரவு வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. குளிர்காலத்தில் இருந்தபோதும், வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே குறையாமல் இருந்தது.
சாதாரணமாக அந்த பகுதியில் குளிர்கால இரவு வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அசாதாரண வெப்பம், சோண்டா காற்று (Zonda Wind) மற்றும் எல் நினோ (El Niño) காரணமாக ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
எல் நினோ வலுப்பெறுவதால், பசிபிக் பகுதியில் கடும் புயல் செயல்பாடு அதிகரிக்கும் எனவும், பிலிப்பைன்ஸ் அருகே உருவான டிராபிக்கல் ஸ்டார்ம் Noul சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் புயலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |