அந்த நாட்டைவிட்டு வெளியேறுங்கள்... கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தல்
உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டுள்ளதால், உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கனடா தனது குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை துவங்கலாம் என கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் எனில் ரஷ்யா ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கனேடிய மக்கள் உக்ரைன் உடனான அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, உக்ரைனில் உள்ள கனேடிய மக்கள் உடனடியாக நாடு திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் உக்ரைன் மீதான தாக்குதல் திட்டம் ஏதும் தங்களிடம் இல்லை என ரஷ்ய தெரிவித்துள்ளது. இருப்பினும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும் எனவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது 100,000 படைகளை குவித்துள்ளது.
இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, உக்ரைன் பிரதமரை சந்திக்கும் பொருட்டும் கனடாவின் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும் உக்ரை புறப்பட்டு சென்றுள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளித்துவரும் 200 கனேடிய ராணுவத்தினரையும் அமைச்சர் சந்திக்க இருக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022