கனடாவில் 6 ஆண்டுகள் கழித்து அம்பலமான ஆசிரியரின் லீலை! மாணவி கொடுத்த புகாரில் சிக்கினார்
கனடாவில் ஆசிரியராக பணியாற்றியவர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
தெற்கு அல்பர்டாவை சேர்ந்தவர் ஹார்லி ஆர்தர் டிக்கின்சன். இவர் கடந்த 2015ல் ஆசிரியராக பணியாற்றிய போது மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான பொலிஸ் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பரில் தான் தொடங்கியது.
விசாரணையை அடுத்து பொலிசார் ஆர்தரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்படி 16 வயதுக்கு குறைவான மாணவிகள் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் கூறுகையில் தொடர்ந்து ஆர்தர் வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டால் எங்களிடம் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் அடுத்த மாதம் மீண்டும் ஆர்தர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.