கேரளாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து ட்ரக் சாரதியான இளம்பெண் கூறும் பயனுள்ள தகவல் ஒன்று
கனடாவில் வேலை வாய்ப்பைப் பெறுவது எப்படி என்ற கேள்வி ஏராளமான புலம்பெயர்ந்தோர் மற்றும் கனடாவுக்கு புலம்பெயரும் ஆசையிலிருப்பவர்கள் மனதில் கணப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் அது குறித்துக் கேட்பவர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அவர் கூறுவதைப் பார்த்தால், கனடாவில் ட்ரக் சாரதியாவது, பெண்களுக்கும் கூட சாத்தியமே என்றே தோன்றுகிறது.
தான் ட்ரக் சாரதியானது எளிதான ஒரு விடயமல்ல, அது சற்றே கடினமான ஒரு வழிமுறையானதுதான் என்று கூறும் அந்த பெண், ஆனாலும் கனடாவுக்கு புலம்பெயர விரும்பினால், முறைப்படி கல்வி பயின்று, பயிற்சி பெற்று வாருங்கள். உங்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும் என்கிறார்.
கனடாவுக்கு வருவதற்கு, பல வழிமுறைகள் உள்ளன. தனக்கு புலம்பெயர்தல் குறித்து பெரிய அளவுக்கு விவரமாகத் தெரியாது. ஆனால், மாணவர்களாக வருவது ஒரு நல்ல வழிமுறையாகும் என்று கூறும் அந்த பெண், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தானும் ஒரு மாணவியாக கனடாவுக்கு வந்ததாகவும், கனடாவில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன என்றும், அவற்றில் ட்ரக் சாரதியாக வேலை செய்வதும் ஒன்று என்றும் கூறுகிறார்.
இங்கே ட்ரக் சாரதிகள் பாதுகாப்பாக உணரலாம், கௌரவமாகவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள் என்று கூறும் அந்த பெண்ணின் பெயர் முதலான விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், அவர் கூறுவதைக் கேட்கும்போது, முறையான பயிற்சி பெற்றோர் நிச்சயம் கனடாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை உருவாகுவதை உணரலாம்.