3வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட தமிழ்ப்பெண்ணான கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்!
கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த 3வது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.
கனடாவில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு 31.4 மில்லியன் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
அதே போல 29.4 மில்லியன் மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும், 7,318,232 பேர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை நேற்று செலுத்தி கொண்டார்.
So happy to have received my third shot today!
— Anita Anand (@AnitaAnandMP) December 29, 2021
Thank you to all of the health care professionals and volunteers who are administering vaccines at clinics across the country! ????? pic.twitter.com/PJeXDmjhns
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், இன்று எனது மூன்றாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!
நாடு முழுவதும் உள்ள கிளினிக்குகளில் தடுப்பூசிகளை வழங்கும் அனைத்து சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.