லெபனான் மக்களுக்கு கனடா 10 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக கனடா 10 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய நிதி உதவியை, சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் அகமத் ஹுசேன் சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த நிதி, உணவு, தண்ணீர் மற்றும் அவசர மருத்துவ உதவிகள், குறிப்பாக பாலியல் மற்றும் மகப்பேறு சுகாதார உதவிகளை வழங்க பயன்படும் என்று அகமது ஹுசேன் அறிவித்தார்.
கனடா வழங்கிய இந்த நிதி, ஐநா மத்திய அவசரப் பதிலளிப்பு நிதியத்தின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவிக்கு கூடுதலாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடா, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 21 நாட்கள் உடனடி போர்நிறுத்தத்தை வேண்டியுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் உதவியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
கனடா லெபனானில் நிலவும் சூழ்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்கு உதவிக்காக உள்ள நிதி அனுசரண அமைப்புகளுடன் நெருக்கமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“மோதலில் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுடன் கனடா அன்பும் அக்கறையும் காட்டுகிறது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் உறுதியாக இருக்கிறது,” என்று வெளிநாட்டுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada announces 10 million dollars for humanitarian assistance in Canada , Canada Canada, Israel Hezbollah