கனடாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் காயத்துடன் இருந்த பெண்ணை மீட்க சென்ற பொலிசாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
கனடாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வின்னிபெக்கின் டவுண்டவுனில் உள்ள அடுக்குமாடி வீட்டில் உள்ள பொது பகுதியில் பெண்ணொருவர் காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு நேற்று தகவல் வந்தது.
இதையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு பொலிசார் காயங்களுடன் கிடந்த பெண்ணை மீட்க அங்கு சென்ற போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். பின்னர் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.
Tyson Koschik/CBC
அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது, இதனை தொடர்ந்து கொலைப் பிரிவு பொலிசார் இது தொடர்பில் தங்கள் விசாரணை நடத்தி தொடங்கியுள்ளனர்.
புலனாய்வாளர்களுக்கு உதவக்கூடிய தகவல் யாரிடமாவது இருந்தாலோ அல்லது வீடியோ கண்காணிப்பு பதிவுகள் இருந்தாலோ தங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.