உலகிலேயே முதல் முறையாக 4-வது கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம்!
அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் 1-டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம் அளித்துள்ளது.
இது கனடாவில் அவசரக்கால கொரோனா தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நான்காவது தடுப்பூசியாகும். முன்னதாக, ஃபைசர்-பயோஎன் டெக், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகிய இரட்டை-டோஸ் தடுப்பூசிகளை அங்கீகரித்திருந்த நிலையில், இப்போது ஜான்சன் அண்ட் ஜான்சனின் 1-டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே 4 தடுப்பூசிகளை அங்கீகரித்த முதல் நாடாக கனடா உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சனிடமிருந்து 10 மில்லியன் டோஸை ஆர்டர் செய்துள்ள கனடா, மேலும் 28 மில்லியன் டோஸ்கள் வரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆர்டர் செய்துள்ள 10 மில்லியன் தடுப்பூசி இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி நிர்வகிக்க எளிதான ஒன்றாக பரவலாகக் காணப்படுகிறது, ஏனெனில் இதற்கு ஒரே ஒரு டோஸ் மட்டுமே தேவைப்படுகிறது மற்றும் வழக்கமான குளிர்சாதன பெட்டி வெப்பநிலையில் நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும்.