TikTok செயலியால் பாதுகாப்பு அச்சுறுத்தல்., கனேடிய அரசு சாதனங்களில் தடை
பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அரசு சாதனங்களில் டிக்டோக்கை (TikTok) கனடா தடை செய்துள்ளது.
சீனாவின் TikTok செயலுக்கு தடை
சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக மோசமடைந்துள்ளன.
TikTok-ன் தாய் நிறுவனம் ByteDance ஆகும். இந்த செயலியை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தரவுகளை சீனாவால் எளிதாக அணுக முடியும் என்பதால், சமீபத்திய மாதங்களில் மேற்கத்திய நாடுகளில் இந்த செயலி குறித்த ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.
AFP
தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் சில பகுதிகளும் ஏற்கனவே சீனாவுக்கு சொந்தமான TikTok செயலிக்கான அணுகலைத் தடுத்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை முதல்
இந்நிலையில், பொழுதுபோக்கு வீடியோ பகிர்வு செயலியான TikTok மீது மேற்கத்திய அதிகாரிகளின் பரவலான கவலைகளை பிரதிபலிக்கும் வகையில், கனேடிய அரசாங்கம் வழங்கிய அனைத்து மொபைல் சாதனங்களிலிருந்தும் TikTok செயலியை தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல், "அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மொபைல் சாதனங்களிலிருந்து டிக்டோக் பயன்பாடு அகற்றப்படும். இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் எதிர்காலத்தில் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வதிலிருந்து தடுக்கப்படுவார்கள்" என்று கனேடிய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
மேலும் இது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
Reuters
தற்போது, "அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் பணியிட தொலைபேசிகளில் டிக்டோக்கைப் பயன்படுத்த முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், வணிகம் முதல் தனியார் நபர்கள் வரை பல கனடியர்கள் தங்கள் சொந்த தரவுகளின் பாதுகாப்பைப் பற்றி சிந்தித்து தேர்வுகளை மேற்கொள்வார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்" என்று ட்ரூடோ கூறினார்.