கனடாவில் 22 வயது இளம்பெண்ணை நினைத்து அச்சம் கொண்ட குடும்பம்! சடலமாக கிடந்த சோகம்
உடல்நிலையில் சிக்கல் இருப்பவர் என கனடா பொலிசாரால் விவரிக்கப்பட்ட இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இளம்பெண் மாயம்
பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜைலி ஸ்மித் (22). இவர் தனது வீடு அமைந்திருக்கும் கிளார்க் சாலை மற்றும் கோமோ ஏரி அவென்யூ அருகே கடந்த ஞாயிறு அன்று கடைசியாக காணப்பட்ட பின்னர் மாயமானார்.
Okanagan பகுதியில் இரண்டாண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த ஜைலி இந்தாண்டு தொடக்கத்தில் Lower Mainlandக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.
RCMP/castanet
சடலமாக மீட்பு
ஜைலியின் குடும்பத்தார் மற்றும் பொலிசார் அவரின் உடல்நிலை பற்றி அதிகம் அச்சம் கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காணாமல் போன ஜைலி உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.