உலகின் கார் திருட்டுக்கு தலைநகரான கனடா... விரிவான பின்னணி
கனடாவில் கார் திருட்டு சம்பவங்கள் உலக நாடுகளில் எங்கும் நடக்காதவகையில் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான விரிவான பின்னணி வெளியாகியுள்ளது.
உருமாற்றம் செய்து வெளிநாடுகளில்
கனடாவில் கடந்த 20222ல் மட்டும் 105,000 கார்கள் திருடப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடத்திற்கு ஒரு கார் என திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில், கார் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கும் மிக மோசமான 10 நாடுகளின் பட்டியலில் கனடாவையும் இணைத்து மிக சமீபத்தில் இன்டர்போல் பட்டியலிட்டது.
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், கார் ஒன்று திருடு போனால், அதைப் பயன்படுத்தி மிகக் கொடூரமான வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படும், அல்லது உள்ளூரிலேயே கனேடியர்களுக்கு விற்கப்படும், அல்லது உருமாற்றம் செய்து வெளிநாடுகளில் விற்கப்படும் என குறிப்பிடுகின்றனர்.
கடந்த 2022 அக்டோபர் மாதம் ஒன்ராறியோவில் குடியிருக்கும் ஒருவரின் வாகனம் திருடப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் இருவர் இருப்பதும் கண்காணிப்பு கமெராவில் பதிவானது.
சில மாதங்களுக்கு பின்னர் அதே வாகனம் ஆப்பிரிக்க நாடான கானாவில் இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அந்த நபர் நொறுங்கிப் போயுள்ளார்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி முதல் கனடாவில் இருந்து திருடப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட கார்களை உலகின் பல நாடுகளில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் சுமார் 200 கார்களை அடையாளம்கண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் கார் திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு தொகை என சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு
கார் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, கனேடிய மக்கள் தற்போது கண்டறியும் கருவிகளை பொருத்துவதுடன், பாதுகாப்பு அதிகாரிகளையும் தங்கள் தெருக்களில் அமர்த்தியுள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு தான் அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் கார் திருட்டு சம்பவங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் கனேடிய பொலிசார் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், திருடு போன கார்களில் சிலவற்றை மீட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், 11 மாதம் விசாரணை முன்னெடுத்ததில் 1080 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 550 வழக்குகளுக்கு மேல் பதியபப்ட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து மார்ச் இறுதி வரை மாண்ட்ரீல் துறைமுகத்தில் பொலிசார் முன்னெடுத்த சோதனையில், 600 திருட்டு வாகனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
சுமார் 400 கப்பல் கொள்கலன்களை ஆய்வு செய்த நிலையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023ல் மட்டும் மாண்ட்ரீல் துறைமுகத்தில் இருந்து சுமார் 1.7 மில்லியன் கப்பல் கொள்கலன்கள் வெளியேறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |