கனடாவில் பீர் மற்றும் ஒயின் விற்பனை வரலாறு காணாத சரிவு!
கனடா நாட்டில் வரலாறு காணாத பீர் மற்றும் ஒயின் விற்பனை குறைந்திருப்பதாகவும், மக்கள் மதுவின் சுவையை இழந்து வருகிறார்களா என்ற குழப்பம் கனடா அரசுக்கு எழுந்துள்ளது.
வரலாறு காணாத வீழ்ச்சி
கடந்த 2021-2021 ஆம் ஆண்டில் கனடாவில் ஒரு நபருக்கு விற்கப்படும் பீர் விற்பனையின் விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு மது விற்பனை இந்த அளவிற்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். குடிப்பழக்கத்துக்கான விழிப்புணர்வுகள் அதிகரிப்பதாலும், ஆல்கஹால் மீதான வரி கூட மது விற்பனை குறையக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
பீர் பிரியர்கள்
இந்த நூற்றாண்டில் முதல் முறையாக மது விற்பனை 1.2% குறைந்துள்ளதாகக் கனடா அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் கூறியுள்ளது. ஒயின் விற்பனை 4% குறைந்துள்ளதாகவும் கூறிய இந்த புள்ளி விவரம் இதுவரை காணாத மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.
@getty images
கனடாவில் பீரின் விற்பனை எப்போதும் அதிகரித்திருக்கும் ஆனால் கடந்த சில வருடங்களாகத் தட்டுப்பாடு ஏற்பட்டு 8.8% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
மது ஒழிப்பு விழிப்புணர்வு
கடந்த மாதம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அடிமையாதல் குறித்த கனேடிய அரசு வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் மது அருந்துவதைப் பரிந்துரைக்கவில்லை. மேலும், வழிகாட்டுதல்களின்படி, வாரத்திற்கு இரண்டு கிளாஸ்களுக்கு மேல் குடிக்காமல் இருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லதெனக் கூறியுள்ளது. கனடாவின் புள்ளிவிவரங்களின்படி,குடிக்கத் தகுதியுடைய வயதுடைய கனடியர்கள் வாரத்திற்கு 9.5 மதுபானங்களை உட்கொள்வது மிகவும் குறைவு.