அமெரிக்கர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பது தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு
அமெரிக்கர்களை நாட்டிற்குள் அனுமதி தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கர்கள் சாலை மார்கமாக எல்லை தாண்டி நாட்டிற்குள் நுழைய கனடா தடை விதித்தது.
அதேபோல் அமெரிக்காவும் கனேடியர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்திருந்தது.
இந்நிலைியல், திங்கள் முதல் அமெரிக்கர்கள் எல்லையை கடந்து நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கனடா அறிவித்துள்ளது.
ஆனால், கனேடியர்களுக்கு அமெரிக்கா அதே கட்டுப்பாடுகளை அமுலில் வைத்திருக்கிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் பயணிப்பதற்கு 3 நாட்களுக்கு முன் சோதனை செய்து தொற்று இல்லை என முடிவு வைத்திருக்கும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவிற்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி பயணிகள் கனடா எல்லையை கடப்பதற்கு முன், அவர்களின் விவரங்களை CAN செயலியில் பதிவு செய்ய வேண்டும் என கனடா அறிவித்துள்ளது.