துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய கனடாவின் பெரும் கோடீஸ்வரர்
கனடாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், துஸ்பிரயோகம், பெண்கள் மீது தாக்குதல், வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி கைதாகியுள்ள நிலையில் அவர் மீது ஐந்து கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
வன்கொடுமை, துஸ்பிரயோக வழக்குகள்
கனேடிய பெரும் கோடீஸ்வரரான Frank Stronach வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 91 வயதான அவர் மீது வன்கொடுமை மற்றும் துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1980களில் தொடங்கி 2023 வரையில் அவர் துஸ்பிரயோகம் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Frank Stronach தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்றும் பொலிஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Frank Stronach தற்போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்தின் விசாரணையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எவ்வித தொடர்பும் இல்லை
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். கனடாவில் Magna International நிறுவனத்தின் நிறுவனரான Frank Stronach விசாரணையை எதிர்கொள்ள தாம் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மேக்னா நிறுவனத்திற்கும் இந்த விசாரணைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், 2010ல் அவர் அனைத்து உரிமைகளையும் கைமாறியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Magna International நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது 12.52 பில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |