கனடாவில் இருந்து தாய்மாமா திருமணத்துக்காக வந்த சிறுவன் பலி! பதைபதைக்க வைக்கும் புகைப்படம்
கனடாவை சேர்ந்த 4 வயது சிறுவன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் வங்கியில் பணியாற்றி வருகிறவர் துவானில் ரவல். இவர் மனைவி பூஜா. தம்பதியின் மகன் விவன் ரவால் (4). வரும் 13ஆம் திகதி விவன் தாய் மாமாவுக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் திருமணம் நடக்கவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக கனேடிய குடியுரிமை பெற்ற மூவரும் காந்தி நகருக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைக்கு செல்வதற்காக டாக்சிக்காக பூஜாவும், சிறுவன் விவனும் காத்திருந்தனர்.
அப்போது அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீட்டில் இருந்து ஜெயராம் என்பவர் காரை ஓட்டி வந்தார். முன்பக்கமாக சிறுவன் நிற்பதை கவனிக்காத அவர் காரை அவன் மீது ஏற்றினார்.
இதன் பின்னர் விவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஜெயராமை கைது செய்தனர்.
விபத்து நடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் கார் அருகே சிறுவன் செல்லும் பதைபதைக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.