கனடாவில் மருத்துவமனைக்கு சென்ற 37 வயது பெண்ணிற்கு அங்குள்ள ஊழியரால் நேர்ந்த நிலை!
கனடாவில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பீல் ரீஜினல் பொலிசார் கூறுகையில், கடந்த மாதம் 15ஆம் திகதி 37 வயதான பெண்ணொருவர் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவமனையில் உள்ள Nicholas Sahadeo என்ற 24 வயதான ஊழியர் அப்பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்தி Nicholas-ஐ கைது செய்தோம். அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Peel Regional Police / Handout
கடந்த 10 மாதங்களாக குறித்த மருத்துவமனையில் அவர் வேலை பார்த்து வந்திருக்கிறார். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விரைவில் பிராம்டன் நீதிமன்றத்தில் Nicholas ஆஜர்படுத்தப்படவுள்ளார் என கூறியுள்ளனர்.