அவன் உயிரிழந்தது இந்தியாவிலிருக்கும் அவனது தாய்க்குத் தெரியாது: கனடாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை கண்ணீர்

India Canada
By Balamanuvelan Sep 19, 2022 08:19 AM GMT
Report

கடந்த திங்கட்கிழமை கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மில்ட்டன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த விவரம் இன்னமும் இந்தியாவிலிருக்கும் அவரது தாய்க்குத் தெரியாது என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார் அவரது தந்தை.

கடந்த திங்கட்கிழமை கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மில்ட்டன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய இளைஞர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிசாரான Andrew Hong (48) மற்றும் Shakeel Ashraf (38) என்னும் இருவர் கொல்லப்பட்டார்கள், மூன்று பேர் காயமடைந்தார்கள்.

காயமடைந்தவர்களில் இந்தியரான சத்விந்தர் சிங் (Satwinder Singh, 28)ம் ஒருவர்.

அவன் உயிரிழந்தது இந்தியாவிலிருக்கும் அவனது தாய்க்குத் தெரியாது: கனடாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை கண்ணீர் | Canada Breaks Down In Tears

சத்விந்தரின் தந்தை, துபாயில் ட்ரக் சாரதியாக பணிபுரிகிறார். மகன் சுடப்பட்ட செய்தி அறிந்த அவர் மகனைக் காண கனடாவுக்கு ஓடோடிவந்துள்ளார். கோவிட் காலகட்டத்துக்கு முன்புதான் அவர் கடைசியாக தன் மகனை பார்த்துள்ளார்.

இந்நிலையில், சத்விந்தர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறி மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசத்தை, அவரது உறவினர்கள் அனுமதியுடன் நிறுத்தியுள்ளனர்.

சத்விந்தரின் தாய் மற்றும் சகோதரிக்கோ, அவர் இறந்த விடயம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார் அவரது தந்தை.

இதற்கிடையில், தாக்குதல்தாரியான Sean Petrie (40) பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.  


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US