நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடும் கனடா!

Hinduism
By Ragavan Nov 04, 2022 08:09 PM GMT
Report

லிபரல் கட்சி எம்.பி.யான சந்திரா ஆர்யா, நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாகக் குறிக்க தனி உறுப்பினர் தீர்மானத்தைத் தொடங்கினார்.

அது பின்னர் செப்டம்பர் 29 அன்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பல கலாச்சாரங்களை கொண்ட நாடான கனடாவின் வளர்ச்சியில், இந்து சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்க முதல் முறையாக நவம்பர் மாதத்தை அதன் தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுகிறது.

ஆளும் லிபரல் கட்சி எம்.பி.யான சந்திரா ஆர்யா, இந்த ஆண்டு மே மாதம், நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக (HHM) குறிக்கும் வகையில் தனி உறுப்பினர் தீர்மானத்தைத் தொடங்கினார், இது பின்னர் செப்டம்பர் 29 அன்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடும் கனடா! | Canada Celebrate November Hindu Heritage Month

நவம்பர் 1-ஆம் திகதி எம்.பி. ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று நான் பாராளுமன்ற மலையில் இந்து புனித சின்னமான ஓம் கொண்ட கொடியை உயர்த்துவதன் மூலம் கனடாவின் தேசிய இந்து பாரம்பரிய மாதத்தின் வரலாற்று தொடக்கத்தை குறித்தேன். Hindu Heritage Month ஆனது 830,000 இந்து-கனேடியர்களின் நமது நாட்டிற்கும் இந்து பாரம்பரியத்திற்கும் மனித குலத்திற்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று எழுதினார்.

கனடா பிற மதங்களின் பாரம்பரிய மாதத்தையும் குறிக்கிறது, இதில் ஏப்ரல் மாதம் சீக்கிய பாரம்பரிய மாதமாகவும், மே மாதத்தை கனேடிய யூத பாரம்பரிய மாதமாகவும், அக்டோபர் மாதம் கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதமாகவும் உள்ளது.

பாரம்பரிய மாதத்தின் நோக்கம் அறிவியல், கல்வி மற்றும் மருத்துவம், சட்டம், அரசியல், வணிகம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டின் இந்து சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டாடுவதும், அங்கீகரிப்பதும் ஆகும்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US