கனடாவில் இந்து பாரம்பரிய மாத கொண்டாட்டம்! புடவையில் ஜொலித்த தமிழ்ப்பெண்ணான பாதுகாப்பு அமைச்சர்
நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடும் கனடா.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா ஆனந்த்.
நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கனடா கொண்டாடும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த் இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பல கலாச்சாரங்களை கொண்ட நாடான கனடாவின் வளர்ச்சியில், இந்து சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்க முதல் முறையாக நவம்பர் மாதத்தை அதன் தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுகிறது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள விஷ்ணு மந்திரில் இந்து பாரம்பரிய மாத கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பெண்ணான நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தும் கலந்து கொண்டார்.
Yesterday, I joined the Hindu community at Vishnu Mandir to celebrate Hindu Heritage Month.
— Anita Anand (@AnitaAnandMP) November 7, 2022
We celebrated the social, economic, and cultural contributions of the Hindu community in Canada and recited Gayatri Mantra.
To communities near and far, happy Hindu Heritage Month! pic.twitter.com/mEDZjtpEUJ
இந்து நாகரிகத்தின் கனடா அருங்காட்சியகத்தின் தலைவர் பதவியையும் அனிதா ஆனந்த் வகித்திருக்கிறார். புடவை உடையில் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நேற்று, நான் விஷ்ணு மந்திரில் இந்து சமூகத்துடன் இணைந்து இந்து பாரம்பரிய மாதத்தைக் கொண்டாடினேன். கனடாவில் உள்ள இந்து சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரப் பங்களிப்பைக் கொண்டாடியதோடு, காயத்ரி மந்திரத்தை ஓதினோம்.
இந்து பாரம்பரிய மாத வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.