சீனாவில் கனேடியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை! அதிரடியாக நிராகரித்த நீதிமன்றம்
கனேடிய குடிமகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை சீனா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தியதற்காக சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கனேடிய குடிமகன் Robert Lloyd Schellenberg-ன் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், போதைப் பொருள் கடத்திய விவகாரம் தொடர்பாக Robert Lloyd Schellenberg-க்கு ஆரம்ப கட்ட விசாரணையின் போது, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன் பின் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட போது, இந்த குற்றத்திற்கு இது போதுமான தண்டனை கிடையாது என, அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
கனடாவிற்கும், சீனாவிற்கும் இடையேயான உறவு தற்போது மோசமாக இருப்பதால், இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பிற்கு கனேடிய தூதர் Dominic Barton கண்டனம் தெரிவித்தார்.
சீன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் மகள் Meng Wanzhou தற்போது அமெரிக்க வாரண்டில் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக, சீனா இப்படி செயல்படுவதாகவும், இது ஒரு தற்செயலான நிகழ்வு போன்று தெரியவில்லை என கனடா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சீனா இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சுமார் 227 கிலோ எடை கொண்ட methamphetamine போதை பொருளை கடத்த திட்டமிட்டதாக Robert Lloyd Schellenberg மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், நான் ஒரு சுற்றுலாப் பயணியாகவே சீனாவிற்கு வந்ததாக கூறினார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அப்போது அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு பின் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி Meng Wanzhou அமெரிக்காவின் கைது வாரண்ட் அடிப்படையில் கனடா கைது செய்தது.
இதனால் சீனா Meng Wanzhou விடுவிக்காப்படாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா அந்த நேரத்தில் எச்சரித்தது.
இந்நிலையில், தான் Robert Lloyd Schellenberg தன்னுடைய 15 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். ஆனால் நீதிமன்றமோ தண்டனையை குறைக்காமல், இதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் குறைவு, இதனால் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தது.
அந்த தீர்ப்பில் சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கு சான்றுகள் தீவிரமாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், Robert Lloyd Schellenberg வழக்கறிஞர் விசாரணையில் புதிய சான்றுகள் எதுவும் முன்வைக்கப்படாததால் தண்டனை அதிகரிக்கப்படக்கூடாது என்று கூறினார்.
இதையடுத்து மீண்டும் மரணதண்டனைக்கு எதிராக மேல்முறையீடு சீனா நிதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதற்கான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.