இந்திய மாணவர்களுக்கு கனடாவின் குடியேற்றத் துறை முக்கிய எச்சரிக்கை
கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
IRCC தெரிவித்ததாவது: “Study Permit விதிகளில் வேலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தால்தான் மாணவர்கள் வேலை செய்ய முடியும். வகுப்புகள் நடைபெறும் காலத்தில், மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
இதை மீறுவது குடியேற்றச் சட்டத்தை மீறுவதாக கருதப்படும். எதிர்காலத்தில் அனுமதி மறுக்கப்படலாம் அல்லது நாடு கடத்தல் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பு, போர்டேஜ் கல்லூரி (Portage College) மாணவர்கள் வேலை அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து வெளியிடப்பட்டது.
கல்லூரி தரப்பில், “மாணவர்கள் சட்ட ஆலோசனை பெற வேண்டும். நாங்கள் தொடர்ந்து IRCC உடன் விளக்கங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் எதிர்கால விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என கல்லூரி அறிவுறுத்தியுள்ளது.
இதில் Study Permit, சேர்க்கை கடிதங்கள் (Joining Letter), கல்வி பதிவுகள், பாடநெறி நிறைவு ஆவணங்கள், மதிப்பெண் பட்டியல், PGWP விண்ணப்பங்கள், IRCC மறுப்பு கடிதங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த விளக்கம், கனடாவில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகும். வேலை அனுமதி விதிகளை மீறாமல், சட்டப்படி வேலை செய்வது மட்டுமே பாதுகாப்பான வழி என IRCC தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |