ஆப்கானுக்கு படையெடுக்கும் கனடா சிறப்பு படை! ஏதற்காக?
உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதை கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிதானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற தொடங்கிய நாள் முதல் ஆக்கிரமிப்புகளை தொடங்கிய தலிபான், தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில், ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள கனடா தூதரகத்திலிருந்து ஊழியர்களை வெளியேற்ற உதவ கனடா சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை மாலை Global News செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், காபூலிலுக்கு சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக குறிப்பிட்ட ஹர்ஜித் சஜ்ஜன், சிறிது காலம் கனடிய இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள் என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டின் நலன்களை பாதுகாக்க கனடா மட்டுமின்றி அமெரிக்காவும் படைகளை அனுப்பியுள்ளது.