பள்ளி ஆசிரியை கணவருடன் சேர்ந்து கைது! சிறுமி கொடுத்த புகாரில் அதிர்ச்சி தகவல் அம்பலம்
கனடாவில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரின் கணவர் பாலியல் தாக்குதல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டாவாவை சேர்ந்த தம்பதி ஆண்ட்ரியா ஆண்ட்ரில் (37) மற்றும் ஹாரி ஆண்ட்ரில் (38). ஆண்ட்ரியா பள்ளிக்கூடம் ஒன்றில் 2017ல் இருந்து 2021 வரையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுமி மற்றும் சிறுவனிடம் ஆண்ட்ரியா மற்றும் ஹாரி தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது.
புகாரையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தம்பதி நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஏதேனும் ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் $2,000 செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்தனர்.
அடுத்த மாதம் 31ஆம் திகதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையில், ஆண்ட்ரியா 2017ல் இருந்து ஆசிரியையாக வேலை செய்த காரணத்தால் அவரால் வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.