கனடாவின் மாஸ்க் அணிதல் தொடர்பான பரிந்துரைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா உங்களுக்கு?
கனடாவில் குளிர் அதிகமாகிவிட்டது. மக்கள் வீடுகளுக்குள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
இந்நிலையில், கனேடிய மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இதுவரை மாஸ்க் அணியுங்கள் என்று மட்டுமே கூறிவந்த நிலையில், தற்போது, நீங்கள் கொரோனாவிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எந்த வகை மாஸ்க் அணிகிறீர்கள், நீங்கள் பயன்படுத்தும் துணியாலான மாஸ்க் உங்களையும் மற்றவர்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கிறதா என்பதை கவனித்துப் பாருங்கள் என்கிறார்கள்.
கனடாவின் பொது சுகாதார அமைப்பு, நவம்பர் 12 அன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கொரோனாவைத் தவிர்ப்பதற்காக மாஸ்க் அணிதல் குறித்த தகவல்களில் சில மாற்றங்களை செய்துள்ளது.
அதில், பொதுவாக, சாதாரண மாஸ்குகள் கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்றாலும், மருத்துவ மாஸ்குகள் (medical masks and respirators) கூடுதல் பாதுகாப்பளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பரிந்துரை, அதிகம் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் தாங்கள் வாழும் சூழலின் அடிப்படையில் அதிகம் கொரோனா தொற்றுடன் தொடர்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் மருத்துவ மாஸ்குகள் அணியுமாறு கூறுகிறது.
N-95 மற்றும் KN-95 masks என அழைக்கப்படும் Respirator வகை மாஸ்குகள், உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கக்கூடியவை என கருதப்படுகின்றன. முன்பு அவை நோயாளிகளுடன் தொடர்புகொள்ளவேண்டிய நிலையிலிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது, அவை பொதுமக்கள் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.