கனடா எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராவில் 511 பேருக்கு அழைப்பு- CRS மதிப்பெண் 706-ஆக குறைவு
கனடாவின் IRCC மே 12, 2025 அன்று நடத்திய Provincial Nominee Program (PNP) அடிப்படையிலான எக்ஸ்பிரஸ் என்ட்ரி டிராவில் 511 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிராவில் குறைந்தபட்ச CRS (Comprehensive Ranking System) மதிப்பெண் 706-ஆக இருந்தது.
இது ஏப்ரல் 28, 2025 அன்று நடந்த முந்தைய PNP டிராவை விட 21 புள்ளிகள் குறைவாகும் (அப்போது 727 புள்ளிகள் இருந்தன).
IRCC-யின் தரவுகளின்படி, மார்ச் 4, 2025 அன்று இரவு 10:35:42 UTC-க்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் என்ட்ரி ப்ரொஃபைல்கள் மட்டுமே tie-breaking விதிக்கு உட்பட்டு அழைப்பு பெற்றுள்ளன.
முக்கியமாக, கடந்த மார்ச் 25, 2025 அன்று வேலைவாய்ப்பு சான்றுகளுக்கான புள்ளிகள் CRS மதிப்பீட்டில் நீக்கப்பட்டன. இதன் மூலம் மேலாளர் நிலை வேலைகளுக்குப் பழைய 200 புள்ளிகளும், பிற வேலைகளுக்கான 50 புள்ளிகளும் தற்போது வழங்கப்படுவதில்லை.
PNP வாயிலாக, கனடாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் தங்களுக்கு தேவையான திறமையான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நாமினேஷன் சான்றிதழ் வழங்கி, அவர்களின் CRS மதிப்பெண்ணை உயர்த்தி, நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பு அளிக்கின்றன.
இந்த குறைந்த CRS டிரா, மேலும் பல வெளிநாட்டவர்களுக்கு கனடா குடியுரிமை கனவுக்கு ஒரு படியாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada Express Entry May 2025, CRS score drop 2025, Express Entry PNP draw 2025, IRCC Express Entry update, Canada PR invitation 2025, Provincial Nominee Program, CRS score latest update, Canada immigration news, Express Entry draw results, How to get Canada PR 2025