உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள கனேடிய நகரம்
கனடாவின் மொன்றியல் நகரம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயால் அதிகரித்த காற்று மாசு
கனடாவில் ஆங்காங்கே பற்றியெரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது. பனியும் புகையும் இணைந்து பனிப்புகை உருவாகியுள்ளதால், மக்கள் சுவாசிக்க கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
உலகம் முழுவதும் மாசுபடுதல் குறித்து ஆராயும் IQAir என்னும் ஆய்வமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
பனிப்புகை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனடா சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறும், கட்டாயம் வெளியே சென்றே ஆகவேண்டுமானால், மாஸ்க் அணிந்து வெளியே செல்லுமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பனிப்புகை காரணமாக, திறந்தவெளி அரங்கங்களில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நீச்சல் குளங்கள் முதலான இடங்கள் மூடப்பட்டுள்ளன.
கனடாவில் 450க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்துவருகின்றது. அவற்றில், 240 இடங்களில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ எரிந்துவருவதாக கனேடிய வனத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |