'அதை நான் செய்து முடிப்பேன்' கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் சபதம்!
கனேடிய இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அவம்சாவளியைச் சேர்ந்த கனேடிய பெண்ணான அனிதா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கடந்த அக்டோபர் 26-ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் Jonathan Vance-க்கு எதிரான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத தன்மைக்காக விமர்சிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjanக்குப் பதிலாக 54 வயதாகும் அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
குளோபல் நியூஸ் அறிக்கையின்படி, கனேடிய இராணுவத்தில் 2016 முதல் 700-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், புதிதாக பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள அனிதா ஆனந்த் தற்போது பதிவிட்ட டீவீட்டில், "அனைத்து கனேடிய விமானப்படை உறுப்பினர்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உணர்கிறார்கள் என்பதையும், அவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதையும், நீதிக்கான கட்டமைப்புகள் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துவதே எனது முதன்மையான முன்னுரிமை" என்று கூறியுள்ளார்.
Photo: REUTERS
மேலும், "ராணுவத்தில் தவறான நடத்தை என்பது ஒரு பெண்ணின் பிரச்சினை மட்டுமல்ல. நமது ராணுவம் திறம்பட செயல்பட, நமது உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், அவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியை சரிசெய்வதே எனது முன்னுரிமை" என்று கூறினார்.
இதில் "நான் உறுதியாக இருக்கிறேன், நான் அதை நிச்சயமாக செய்து காட்டுவேன்" என டெய்லி டொராண்டோ ஸ்டார்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அனிதா ஆனந்த் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, தனது ட்விட்டர் பதிவில், “கனேடிய இராணுவ விரைகள் நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள், மேலும் அவர்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலில் செயல்படுவதை உறுதிசெய்ய நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்." என்றார்.