18,500 வெளிநாட்டவர்களை அமைதியாக நாட்டைவிட்டு வெளியேற்றிய கனடா
அரசு கடந்த ஆண்டில், 18,500 வெளிநாட்டவர்களை அமைதியாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது கனடா அரசு.
18,500 வெளிநாட்டவர்கள்
கனடா அரசு, 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், 18,500க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை அமைதியாக நாட்டைவிட்டு வெளியேற்றியதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான 10 மாதங்களில் 18,785 வெளிநாட்டவர்கள் கனடா அரசால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்களில், சுமார் 2,500 பேர் இந்தியர்கள்.
இதுபோக, மேலும் 29,542 பேரை கனடாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளில் கனடா அரசு ஈடுபட்டு வருகிறது.
வெளியேற்றப்பட்டவர்களில் பலர் குற்ற வழக்குகள் தொடர்புடையவர்கள். என்றாலும், அதிக அளவில் வெளியேற்றப்பட்டவர்கள், அகதிக் கோரிக்கை விதிகளுக்கு இணங்காததால் வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |