கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்
Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
3,234 இந்தியர்கள்
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்திய குடிமக்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனடா எல்லை சேவை நிறுவனம் வெளியிட்ட தரவுகளை PTI தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில், 3,779 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஆனால், 2026-இன் முதல் பாதியிலேயே, இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்தியர்களுக்கு அடுத்ததாக 1,573 மெக்சிகோ குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் முதலிடம்
கடந்த ஐந்து ஆண்டுகளாக மெக்சிகோ குடிமக்களே அதிகமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
2020-ஆம் ஆண்டில் 1,424 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். 2021-இல் 603, 2022-இல் 786, 2023-இல் 1,132, 2024-இல் 2,004 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடா எல்லை சேவை நிறுவனம், வெளியேற்றப்பட்டவர்களின் காரணங்களை நாடு வாரியாக வெளியிடவில்லை. பொதுவாக, விசா விதிமுறைகளை மீறுதல், அகதி அல்லது தஞ்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது, விசா காலாவதியான பின்னும் தங்கியிருத்தல், விசா மோசடி போன்ற காரணங்களால் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
இன்னும் 7,669 இந்தியர்கள்..,
2026-இல், இந்தியர்கள் கனடாவின் “வெளியேற்றப்பட உள்ளவர்களின் பட்டியலில்” அதிகமாக இடம்பெற்றுள்ளனர். அதில் 7,669 இந்தியர்கள் இன்னும் வெளியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
இந்த தரவுகள், கனடாவில் இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் குடியேற்ற சவால்களை வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |