பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா

Asylum Seeker Migrants
By Arbin Feb 27, 2025 07:10 AM GMT
Report

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்கள்

குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2015க்கு பின்னர் கடந்த நவம்பர் மாதம் வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டதாகவே கூறப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா | Canada Deports More People

மேலும், நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டு அதிக தொகையையும் ட்ரூடோ அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. ஆட்சியின் இறுதி கட்டத்தில் இருக்கும் லிபரல் அரசாங்கம் அகதிகள் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், குடியேற்றக் கொள்கைகளில் கடினமாகி வருகிறது என்பதை கனேடிய மக்களுக்கு காட்ட முயல்வதாகவே கூறப்படுகிறது.

மேலும், 2020 முதல் நாடு கடத்தப்படுபவர்கள் எண்ணிக்கையும் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாகவே கனடாவின் எல்லைப் பாதுகாப்பு முகமைகள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் விடுத்த மிரட்டல்... உஷார் நிலையில் ஜேர்மன் பொலிசார்

ஐ.எஸ் விடுத்த மிரட்டல்... உஷார் நிலையில் ஜேர்மன் பொலிசார்

தனிப்பட்ட முறையில் வெளியேறியவர்களை தவிர்த்து 2024ல் ஜனவரி 1 முதல் நவம்பர் 19 வரையில் கனேடிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,300 என கூறப்படுகிறது.

இது 2023ல் வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 8.4 சதவிகித அதிகரிப்பு என்றும் 2022ல் நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 95 சதவிகித எண்ணிக்கை அதிகரிப்பு என்றும் தெரிய வந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா | Canada Deports More People

அகதி நிலை

இந்த 7,300 பேர்களில் சுமார் 79 சதவிகித மக்களின் அகதி நிலை நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் அகதிகள் நிலை கோரி விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இருப்பினும் ஜூலை மாதத்தில் 19,821 ஆக இருந்த மாதாந்திர மொத்த எண்ணிக்கை ஜனவரியில் 11,838 ஆக குறைந்துள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றவும் கனடா திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக மட்டும் ட்ரூடோ அரசாங்கம் 30.5 மில்லியன் கனேடிய டொலர் தொகையை ஒதுக்கியுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா | Canada Deports More People

2023 மற்றும் 2024ல் மட்டும் கனடா எல்லை சேவை முகமையானது வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக 65.8 மில்லியன் கனேடிய டொலர்களை செலவிட்டுள்ளது.

இந்த நிலையில், ட்ரம்பின் மிரட்டலுக்கு பயந்து சுமார் 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை எல்லை பாதுகாப்புக்கு எனவும் ட்ரூடோ அரசாங்கம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US