கனடாவில் நோயாளிகளை தற்கொலை செய்துகொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கலாம்!
கனேடிய மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு மருத்துவ உதவியின் மூலம் மரணிக்க ஆலோசனை வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அதற்காக கனடாவின் மருத்துவ உதவி இறப்பு வழங்குநர்களால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல் ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் மருத்துவ உதவி இறப்பு வழங்குநர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் சங்கமான CAMAP, சமீபத்தில் கனேடிய மருத்துவர்களுடன் ஒரு வெபினார் கூட்டத்தை நடத்தினர்.
அதில், மருத்துவர்கள் பிழைக்க வாய்ப்பில்லாத மற்றும் ஒவ்வொரு நாளும் வலி வேதனையால் அவதிப்படும் தங்கள் நோயாளிகளுக்கு மருத்துவ உதவியுடன் மரணம் (MAID) அடைய வழிகள் இருப்பதாக ஆலோசனைகள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
உலகில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அதிகார வரம்புகளை பொறுத்தவரை, கருணைக்கொலை குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் வெளிப்படையாகத் தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒரு நோயாளி மற்றும் அவருடன் இறப்பவர்களை கடுமையாக ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில், கருணைக்கொலை அல்லது MAID-க்கான கோரிக்கை என்பது சம்மந்தப்பட்ட நபரிடமிருந்து மட்டுமே வரவேண்டும். மருத்துவர்கள் தானாக முன்வந்து பரிந்துரைக்கவோ அல்லது வற்புறுத்தவோ கூடாது.
ஆனால், கனடாவின் CAMAP சங்கத்தால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல் ஆவணம், நோயாளி நபர் தகுதியுடையவராக இருக்கும் பட்சத்தில், MAID-ஐ ஒரு விருப்பமாக (Option) கொண்டு வருவதற்கு மருத்துவர்களுக்கு ஒரு தொழில்முறை கடமை உள்ளது என்று கூறுகிறது.
ஒரு மோசமான மற்றும் சரிசெய்ய முடியாத நோய் அல்லது இயலாமை கொண்ட ஒருவருடன் MAID-ஐ பற்றி ஆலோசனை வழங்குவதில் எந்த சட்டத் தடையும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அந்த நபரைத் தூண்டுவது, வற்புறுத்துவது அல்லது ஒரு உதவி மரணத்தைக் கோருவதை நம்ப வைப்பது நோக்கமாக இருக்கக்கூடாது என்று CAMAP சங்கம் கூறுகிறது.
இதனிடையே, கனடாவில் அடிப்படை வலிநிவாரணிகள் தீர்ந்துவிட்டதால், நோயாளிகளுக்கு தற்கொலை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கனேடிய சுகாதார அமைப்பு அடிப்படை வலி நிவாரணிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. குறிப்பாக காய்ச்சல் பருவத்தில் குழந்தைகளுக்கு வலி மற்றும் காய்ச்சலைக் குறைக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற acetaminophen மற்றும் ibuprofen ஆகிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.