கனடாவிற்கு சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடும் திறன் இல்லை: கண்காணிப்பு அமைப்பு
சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடும் கருவிகள் கனடாவிடம் இல்லை என்று கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
அதிகப்படியான அதிகாரத்துவம் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கனடாவின் மத்திய அரசாங்கத்திற்கு சைபர் குற்றத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான திறன் மற்றும் கருவிகள் இல்லை என்று கனடாவின் உயர் கண்காணிப்பு அமைப்பு செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆடிட்டர் ஜெனரல் கரேன் ஹோகன் (Karen Hogan) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், கனேடியர்களைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான நிறுவனங்களுக்கு இடையில், response, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றில் பாரிய இடைவெளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், கனடாவின் தேசிய சிக்னல் புலனாய்வு நிறுவனம், ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறியது.
மேற்கத்திய இலக்குகளுக்கு எதிராக குற்றவாளிகள் செயல்படக்கூடிய பாதுகாப்பான புகலிடங்களா ரஷ்யாவும் ஈரானும் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சைபர் குற்றத்தைப் பற்றிய பல புகார்கள் தவறான நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக ஹோகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார், மேலும் சிலவற்றிற்கு பதிலளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
Royal Canadian Mounted Police (RCMP) பாதிக்கப்பட்டவர்கள் குற்றங்களைப் புகாரளிப்பதை எளிதாக்குவதற்கும், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு பகிரப்பட்ட சைபர் கிரைம் தரவுத்தளத்தை வழங்குவதற்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்துவதில் தாமதங்களைச் சந்தித்துள்ளது.
ஜனவரி 2024 நிலவரப்படி, அனைத்து RCMP-இன் சைபர் கிரைம் குழுக்களிலும் 30 சதவீத பதவிகள் காலியாக உள்ளன.
கனடாவில் 5 முதல் 10 சதவீத cybercrimes மட்டுமே புகாரளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இதற்குப் பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பொருளாதார நலன்களைப் பாதுகாக்க ஒட்டாவா புதிய உத்தியை விரைவில் தொடங்கும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |