காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை ஆதரிக்கவில்லை: இந்தியாவிற்கு கனடா உறுதி
தீவிரவாதம், பயங்கரவாதம் என்று வரும்போது கனடாவும் இந்தியாவும் ஒரே பக்கத்தில் இருக்கும்: கேமரூன் மேக்கே
கனடாவில் உள்ள சீக்கிய தீவிரவாத குழுக்கள் நவம்பர் 6-ஆம் திகதி மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
கனடாவில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகளால் அடிக்கடி நடத்தப்படும் காலிஸ்தான் வாக்கெடுப்புகளை கனடா ஆதரிப்பதில்லை மற்றும் அங்கீகரிக்கவில்லை என்று இந்தியாவுக்கான கனடா உயர் ஆணையர் கேமரூன் மெக்கே கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கான கனடாவின் தூதராகப் பொறுப்பேற்ற மேக்கே, பிரபல ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், இதுபோன்ற வாக்கெடுப்புகள் நடத்துவது கனடாவில் ஒரு "தனியார் செயல்பாடு" என்றும் கனேடிய சட்டங்களின்படி "ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு, கருத்துச் சுதந்திரத்திற்கு மக்களுக்கு உரிமை உண்டு" என்றும் கூறினார்.
கனடாவில் உள்ள சீக்கிய தீவிரவாத குழுக்கள் நவம்பர் 6-ஆம் திகதி மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பை தடுக்குமாறு கனடாவிடம் இந்தியா ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், MacKay-வின் கருத்துக்கள் வந்துள்ளன.
"கனடிய அரசாங்கம் 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' என்று அழைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை. united India அதாவது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையே கனடா ஆதரிக்கிறது" என்று மேக்கே கூறினார்.
இதையடுத்து, கனேடிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், அவர்களின் இந்திய சகாக்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள் என்று அவர் கூறினார். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவிற்கு இடையிலான எல்லை தாண்டிய குற்றங்கள் குறித்து கனடாவிற்கும் இருப்பதாக அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 19-ஆம் திகதி ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் இதேபோல் வாக்கெடுப்பு நடைபெற்றது, அதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான சம்பவங்கள் மற்றும் வெறுப்பு குற்றங்கள் தொடர்பில் கனடாவுக்கு எதிராக ஒரு அரிய பயண ஆலோசனையை இந்தியா வெளியிட்டது.